Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, January 22, 2007

என் ஜன்னலின் வழியே : ' வெயில்'


"என்பிலதனை காயும் வெயில் போல

அன்பிலதனை காயும் அறம் !! "


பால்யம் என்பது கனவுகள் பூக்கும் தொழிற்சாலை.முடிவற்ற கனவுகளின் நீள்பாதயில், கடந்து வருவதே அறியாமல் பால்யதை கடந்து விடுகின்றோம். தொலைந்துவிட்ட கைக்குட்டையைப் போல, மனம் ஏனோ அதைத் தேடிப் பார்க்க விரும்புவதே இல்லை !. பால்யதின் அவமானங்களும், புறக்கணிப்புகளும் உடம்பில் உள்ள மச்சத்தைப் போல ஒட்டிக்கொண்டே வருகின்றன,வடுக்களின் கயப்பு அவ்வப்போது நம்மையறியாமல் நாவில் ஊறிவிடுகின்றன.அப்படிப்பட்ட ஒரு தருணத்தின் பதிவு தான் 'வெயில்'.

வெயில் கருணையற்றது.அது மனிதர்களின் சுபாவங்களை மாற்றி, மூர்க்கமேற செய்துவிடுகிறது.பின்னிரவுகளில் கூட, கண்களுக்குப் புலப்படாத தன் ஆயிரம் கைகளால் அரவணைக்கத் துடிக்கிறது வெப்பம். வெயிலேறிப்போன ஊர்களின் மக்கள், வெயிலின் சுபாவம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் - அவர்கள் சூரியனைப் போலவே அலைக்கழிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.

ஒவ்வொரு வீடும் வீட்டைவிட்டு ஓடிப்போனவர்கள் பற்றிய ஒரு கதையை வைத்திருக்கிறது. 'வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள்' என்று உலகில் ஒரு பிரிவினர் தனித்தே இருக்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கென ரகசிய ஆசைகளையும், தங்கள் ஊர் பற்றிய நினைவுமாய் நம்மைச் சுற்றி வந்து கொண்டு தான் இருகிறார்கள். அவர்களில் எத்தணை பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருப்பார்களோ ?? தெரியாது.

வயதும் ஆசையும் வளர வளர கால்கள் வீடு என்ற சுவர்களுக்குள் இருப்பு கொள்ள மறுக்கிறது.நானும் என் பதின் வயதுகளில் வீட்டை விட்டு ஓடுவதர்க்கான சரியான நாளைத் தேடி தேடி அலுத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், அருகில் வரும் பண்டிகையோ, பிறந்த நாளோ அந்த மகத்தான நாளை ஒத்திப்போட்டுவிடும். திரும்பவும் வீட்டை விட்டு ஓடும் வாஞ்சை கவ்விக்கொள்ள துடங்கி விடும்.

அப்படியொரு பருவத்திலிருக்கும் முருகேசன், வழக்கம் போல பள்ளியை முடக்கி விட்டு, உள்ளூர் டாக்கீசில் ஓடும் MGRபடத்துக்கு செல்கிறான்.தம்பி கதிரை அழைத்து செல்ல மறுக்கும் முருகேசன், நண்பர்களுடன் விசில், கைதட்டல், பீடிப்புகை சகிதம் படத்தில் மூழ்கியிருந்த நேரம், தியேட்டர் முதலாளி மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்கிறார் கசாப்புக் கடை வியாபாரியான முருகேசனின் அப்பா.

'நமது அவமானங்களும் வேதனைகளும் தான் நம் பிள்ளைகளின் முதுகில் அடிகளாக விழுகின்றன' என்பார்கள். உக்கிரமேறீப்போனவரான அப்பா, முருகேசனை சுடும் மண்ணில் நிர்வாணியாக, எல்லோரும் பார்க்க வீதியில் இழுத்து வந்து கட்டிப் போடுகிறார்.அவமானத்தின் வாய் கவ்விக் கொள்ள, அப்பவிடம் கெஞ்சுகிறான் முருகேசன். சலனமற்று பீடியை இழுத்தபடி அமர்ந்திருக்கிறார் அப்பா !.

அவமானப் படுவதை விட வேதனையானது, நம் அன்பிற்குறியவர்கள் முன் அவமானப் படுவது. சோட்டுப் பையன்களின் கேலிக்கு மத்தியிலும் அன்பிற்குரிய பாண்டியம்மவின் பரிதாவமான பார்வை வேதனையை அதிகப்ப் படுத்துகிறது.தம்பிதான் தன்னை மாட்டி விட்டிருப்பனோ என்று கோபித்துக் கொள்கிறான்.அம்மா தரும் உணவையும் புறக்கணிக்கிரான். ஊரே அடங்கிவிட்ட, உறக்கமற்ற அந்த இரவில் சலமின்றி ஊர்ந்து செல்கிறது நிலவு. சட்டென எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு, கையில் சிக்கும் பணத்தயும், நகையையும் எடுத்துக்க் கொண்டு ஊரை விலக்கிய பாதையில் நடக்க துவங்குகிறான் முருகேசன்.ஊரின் வெயில் அவனைப் பதுங்கியபடி பார்த்துக் கொண்டே இருக்கிறது.

கவர்ந்த பொருட்க்களை வெகு சீக்கிரத்திலேயே தொலைத்துவிட்டு, ஒரு தியேட்டரில் தஞ்சம் போகிறான்.கை தட்டல், விசில் சத்தம், சினிமாச் சுருள், ப்ரொஜ்க்டர் வெளிச்சம் என்று நீள்கிரது வருடங்கள். திரைகள் MGR, ரஜினி என்று மாறுகிறதே தவிற ரசிகர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். திரைகளின் ஓட்டத்திலேயே காலமாற்றத்தை பிரதிபலிப்பது நல்ல டச்.

வளர்ந்து ஆளான பின்னும் நிரய காசு சம்பாதிக்க வேண்டும் என்றும் , எடுத்து வந்த நகை, பணத்துடன் தான் சொந்த ஊர்பக்கம் போக வேண்டும் என்றும் தீராத ஆசை கொன்டவனாக இருந்தான் முருகேசன்.

எந்த ஒரு இளைஞனின் வாழ்வையும் காதல் வெகு சீக்கிரமாக ஆக்கிரமித்து விடுகிறது. வாழ்வின் பெரும்பகுதியை தியேட்டர் சீட்களுடன் கழித்த அவனுக்கு காதல் புதிய ஜன்னல்களை திறந்து வைக்கிறது.காலபேதமின்றி காதலி தங்கத்துடன் மோகித்துச் சுற்றுகிறான். காதல் ஒரு மணல் கடிகாரம்...அதில் மனம் நிறய நிறய மூளை காலியகிறது.அப்படியொரு 'பகல் காட்சியில்' காதலியுடன் அகப்படுகிறான். அதுவரை இனித்திருந்த காதல் அறுந்து போன பாசி மாலையைப் போல கண்முன்னே உருண்டோடுவதைப் பார்க்கிறான். தங்கத்தின் தந்தை "சினிமா காட்டி எம்பொண்ண மோசம் பன்னிட்டியேடா " என்று கதறுகிறார்.

தங்கத்துக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது இரவோடு இரவாக முருகேசனின் கொட்டகையில் வந்து நிற்கிறாள் தங்கம். விஷயமறிந்து வரும் உறவினர்கள் முருகேசனைத் தாக்குகிறார்கள். தொடர்ந்து நடக்கும் கலவரத்தில், தங்கம் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை விடுகிறாள். விருப்பத்துக்குறியவர்கள் கண் முன்னே சிதைந்து போவதைக் காட்டில் சொகத்தை உமிழ்வது வேறெதுவும் இருக்க முடியாது. காதலை இழந்தவனின் வாழ்வு வேறெதிலும் இருப்பு கொள்வது இல்லை. இதற்கிடையில் தன்னை மடியில் வாங்கி வளர்த்த தியேட்டரும் மூடப்படுவதால் வேலையும் பறிபோகிறது. "எங்களுக்கு இத விட்டா என்ன தெரியும் மொதலாளி " என்று கேட்க்கும் முருகேசனின் குழகுழத்த குரலின் அடியில் அவனின் அறியாமை நிழல் படிகிறது. தியேட்டர் முதலாளி எல்லோருக்கும் கொஞ்சம் காசு கொடுத்து விடை சொல்கிறார். பணத்தைப் பெற மணமற்றவனாக முருகேசன் திரும்பிப் பார்க்காமல் செல்கிறான். காலியான தியேட்டரிலிருந்து வெளியேறும் ப்ரொஜெக்டரை எல்லோரும் ஒரு சவ நிகழ்ச்சியைப் போல பார்க்கிறார்கள். தங்களை இத்தனை நாளும் மகிழ்வித்த விசித்திர ஜீவன் போவதை, சர்க்கசில் பஃப்பூன் விடைபெறும் காட்சி போன்றதொரு குழந்தையின் துக்கத்துடன் பார்க்கிறார்கள்.தான் தொழில் செய்த இடம் உருக்குலைவதைப் பார்க்க மனமின்றி ஏதோ ஒரு மூலையில் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறான் முருகேசன். வாழ்வில் முதல் முறை தான் தணித்து விடப்பட்டதாகவும், யாருமற்றவனாகவும் உணர்ந்து உடைகிறான்.

எல்லொருடைய கால்களிலும் கட்டப் பட்டிருக்கும் கண்களுக்கு புலப்படாத மாயக் கயிற்றின் மறுமுணை அவரவர் சொந்த ஊரில் தான் இருக்கிறது.அது தனக்கு தேவைப் படும் போது நம்மை இழுத்துக் கொள்வதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது.

தயக்கத்துடனும் கூச்சத்துடனும் சொந்த ஊரில் வந்திறங்குகையில் , சொந்த மண்பட்டு உடல் சிலிர்க்கிறது. பெரிதாக ஒன்றும் மாறியிராத ஊரில் தன் வீட்டைக் கண்டு கொள்வது கடினமாக இல்லை. அழுக்கு வேட்டி, ஒற்றைப் பை, துக்கத்தில் இடுங்கிய கண்கள், புழுதி படிந்த கால்கள் என தன் முன் நிற்கும் அவனை, எளிதில் அடையாளம் காண முடியவில்லை தந்தைக்கு.காலம் நம்மில் சில மாற்றங்களையும், அனுபவங்களையும் கொண்டுவந்தாலும், பால்யத்தின் சுபாவங்களும்சிறு வயதில் கொண்ட அச்சங்களும் நம்மை விட்டு அகலுவதே இல்லை !. அதனால் தானோ என்னவோ, இன்றளவும் நாம் படித்த பள்ளிகளையோ ஆசிரியர்களையோ கடக்கையில் ஒரு வித அச்சமும் பதற்றமும் வந்து தொற்றிக் கொண்டு, வருடங்கள் கழிந்த பால்யம் வந்து ஒட்டிக்கொள்கிறது.

அப்பா முன் சட்டையின் ஒரு மூலையைக் கசக்கிக் கொண்டு நிற்கும் முருகேசன் மீண்டும் ஒரு கரிசல் காட்டு சிறுவனாக மாறிவிடுகிறான். ஆத்திரம் கொள்ளும் அப்பா, அவனை அப்படியே போய்விடும்படி சொல்கிறார். சத்தம் கேட்டு வரும் அம்மா "யாரு தம்பி வேனும்?" என்று கேட்க, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத தவிப்பும், காலம் தன் அடையாளங்களை அழித்து விட்ட மாயமும், அவமானமுமாக வந்த வழியே திரும்புகிறான். போக்கிடம் தெரியாமல் நிற்க்கும் கால்களை
உற்று கவனித்திருக்கிறீர்களா?. அவை இரத்தம் உரைந்து நடுங்கிக் கொண்டிருப்பவை !. பசியும் வேதனையும் அலைக்கழிக்க ஒரு டீக்கடையில் ஒதுங்குகிறான் முருகேசன்.

(இது வரைக் கதை ! இதர்க்கு மேல் சினிமா !! )



எதர்ச்சியாக அங்கு வரும் தம்பியை எளிதில் அடயாளம் கண்டுகொள்கிறான். வருடங்கள் கடந்தும் தன் நினைவுகளின் சாலையில் கைகோர்த்து விளையாடிய அண்ணனின் நினைவு மேலெழுகிறது. மனது கணக்கிறது.குரல் உடைந்து போய் தம்பி "அண்ணே ! உன்ன நான்ஞ் சொல்லிக் குடுக்கலண்ணே" என்கிறான். கண்ணீர் தழும்ப இருவரும் கட்டியனைத்துக் கொள்கிறார்கள். உணர்ச்சி பொங்கும் காட்ச்சியில் திரையரங்கத்தையே நிசப்தமாக்கி அனைவரின் மனதயும் அள்ளிச் செல்கிறார்கள்...

அழயா விருந்தாளியாக தன் வீட்டிற்குள் மறு பிரவேசம் செய்யும் முருகேசனை சொந்த வீட்டிலேயே விருந்தாளி போல நடத்துவதும், வெயில் காயும் பகல் பொழுதுகளில் யாருமற்ற தனிமையும் உழற்றுகிறது. யாருமே அமராத ஒரு பூங்கா பெஞ்சைப் போல, பாதசாரிகள் இல்லாத ஒரு ஒற்றையடிப் பாதையைப் போல, நீள்கிறது முருகேசனின் நாட்கள்.

சொந்தக் கடையில் வேலை செய்யக் கூடாது என்று மறுக்கிறான் தம்பி.வேலையற்றவனின் பகல் பொழுது மிக நீண்டதாக இருக்கிறது. காலப் போக்கில் விருப்பங்கள் குலைந்து போய்விடுகையில் உறவுகள் ஒரு காய்ச்சல் மாத்திரையைப் போல அடிநாவில் கயப்பை ஏற்படுத்தத் துவங்குகின்றன.இவை அனைத்திலிருந்தும் அவனுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் தன் பதின்வயது தோழியான பாண்டியம்மாவும், அவளது குழ்ந்தயும்.நாம் விருப்பமுற்றவர்களின் மீது கொள்ளும் அன்பு, அவர்களின் குழ்ந்தைகளின் மீதும் தொற்றிக் கொள்கிறது. எப்போதும் பாண்டியம்மவின் குழ்ந்தயுடன் சுற்றுவதும், சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடி வெட்குவதும், சுற்றும் பம்பரத்தை பாண்டியம்மாவின் பெண்ணின் கையில் தருவதும், அவ்வாறு பாண்டியம்மாவிடம் கொடுத்ததை நினைவு கூறுவதுமான காட்சிகள் நெகிழ்ச்சி.

தங்கை திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் காணாமல் போகவே, முருகேசனின் அப்பா போடும் கூச்சலில் ஊரே திரண்டுவிடுகிறது. விஷயம் அறியாது வீட்டிற்க்கு வரும் முருகேசனிடம் "எடுத்திருந்தா குடுத்துருயா ! " என்று அம்மா கதற, "நா எடுக்கலம்மா..?" என்று சிறு பிள்ளைப் போல கூனி நிற்கிறான் முருகேசன். வெகுநெரம் கழிந்து வரும் தங்கை தோழிகளிடம் காட்ட எடுத்துச் சென்றதாக வந்து சொல்ல.."ஓ...என்று உடைந்து அழுகிறான் முருகேசன்...அவனது ஓலச்சத்தம் தெருவெங்கும் நீண்டு மறைகிறது".

நம்மை நெசிப்பவர்களே நம்மைச் சந்தேகப் படுவதைப் போல துர்பக்கியம் வேறென்ன இருக்க முடியும் ?. ஒரு கிழிந்த காகிதத்திற்கு இருக்கும் மதிப்பு கூட அற்றவனாக, காற்றில் அலைக்கழிக்கப் படுகிறது அவனது வாழ்வு.யாருமற்ற அந்தப் பகலில் போகும் இடம் அறியாமல் அவன் கால்கள் நடுக்கத்துடன் நகர்கிறது. வீட்டிற்க்கு திரும்பும் தம்பி கதிர் நடந்தவை அறிந்து ஆதிரமடைகிறான்.ஆண்ணனைத் தேடி அலைகயில், வியாபார எதிரிகளால்தாக்கப் பட்டு மருத்துவமணையில் உயிர் போகும் நிலையில் இருக்கிறான்.தனக்கு அனைத்துமான தம்பியைக் காப்பாற்ற எதிரிகளைத் தீர்த்துக்கட்ட புறப்படுகிறான் முருகேசன்.


தம்பி கதிரேசன் மருத்துவமணையில் உயிர் பிழைத்து கண்திறக்கையில், முருகேசன் சலனமற்று கண்கள் நிலைகுத்தி உயிர் பிரிகிறான்.கடைசி வரை தன்னால் யவரக்கும் பயனற்றுப் போன வெறுமை அவன் உறைந்த கண்களில் தென்படுகிறது...துக்கம் பீறிட எல்லோரும் பெருங்குரலெடுத்து அழுகிறார்கள். "எங்குலத்த காத்த தெய்வம்டா அவன் " என்று முதல் முறையாக முருகேசனுக்காக கண்ணீர் சிந்துகிறார் அப்பா. என்ன உறவு சொல்லி அழுவதென்று அறியாமல் பாண்டியம்மாவும் அவள் பெண்ணும் அழுகிறார்கள். அனைவரின் துக்கத்தயும் வாங்கி குடித்துக் கொண்டு சலனமற்ற ஒரு குளத்தைப் போல முருகேசன் படுத்திருக்க திரை சுருள்கிறது.

புல்லைக் காட்டிலும் வேகமாக வளர்வது எது என்று கேட்க்கும் யட்சதனிடம் - ' கவலை' என்கிறார் தருமன். தீராத கவலை பீடித்த மனிதனாக திரையெங்கும் வியாபித்து இருக்கிறார் பசுபதி. எல்லாக் குடும்பங்களிலும் யாரோ ஒருவருக்கு மட்டும் எதுவுமே சரியாக அமையாமல் கவலையின் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.அவர்களின் துக்கங்கள், பேச்சுக்கள், இரகசிய கண்ணீர் ஆகியவற்றின் பதிவாக இருக்கிறது 'முருகேசன்' கதாபாத்திரம்.

தாயால் பதுக்கி வைக்கப்பட்ட, பகிர்ந்தது போக மிஞ்சிய முறுக்கோ, அதிரசமோ எல்லோருக்கும் வாய்க்கப் படுவதில்லை. ஒரு தொப்பூழ்கொடி வரும் இருவரின் மாறுபட்ட இரு வாழ்வின் விசித்திரமான பாடலை ஒலித்துச் செல்கிறது 'வெயில்'. திரையரங்கு விட்டு வெளி வரும் எல்லோரும் தமக்கு வேண்டிய யவரோ ஒருவரின் நினைவு மேலெழுந்த படி வருகிறார்கள்.

நள்ளிரவுக் காட்சி முடிந்து, ஆளரவமற்ற நெடுஞ்ச்சாலையில் நடந்து வருகிறேன். யவனோ ஒரு சிகரட்டை புகைத்து எறிந்த படி ஒரு கைப்பையுடனும், அழுக்கு வேட்டியுமாக வருபவரிடம் அடுத்த வண்டிக்கான நேரம் கேட்டு நிற்கிறான்.அனைக்கப் படாத சிகரட் காற்றில் கரைகிறது..

வர்த்தைகள் தானாக வந்து விழுகிறது...


"தூக்கி எறியப்ப் படும் சிகரட்டுகள் கூட

யாரோ ஒருவனால் பொறுக்கப் படுகிறது


அதைப் பற்ற வைத்த தீக்குச்சிகள் தான்


யாருக்குமே பயனற்றுப் போய் விடுகிறது"


*** முற்றும் ***

Monday, September 25, 2006

என் ஜன்னலின் வழியே: ரஜினி சப்தமா? சகாப்தமா?


ரஜினி :சப்தமா? சகாப்தமா?

::சக்த்திகள் அதிகமாகும் போது பொறுப்புகளும் அதிகமாகிறது ::
(SPIDERMAN படத்தில் வரும் ஒரு வசனம்)


"பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..
லட்சியமாவது புடலங்காயாவது..
சுகமாக,சந்தொஷமாக,நிம்மதியாக வாழனும்..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ விடனும்.. "



இது ஏதோ சாமியாரோ..அல்லது தெருக்கோடியில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் மனிதரின் பேச்சல்ல.தமிழ்த் திரையுலகின் புதிய கதவுகளைத் திறந்து,பல இலக்கணங்களை உருவக்கி,மிகக்குறுகிய காலத்தில் இன்று உலக அளவில் தனக்கென ஒரு மிகப்பெரிய மக்கள்கூட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு மாமனிதனின் சொற்கள். ஒரு 25 வருடங்களுக்கு முன் அந்த தாடியுடன் கூடிய மெலிந்த கருத்த அழுக்கு மனிதன் திறந்த ஒரு பழைய இரும்பு கேட், தமிழ்த் திரை உலகின் புதிய வாசல்களைத் திறக்கப் போவதைப் பலரும் அப்போது அறிந்திருக்கவில்லை...!!

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிஷத்தில் கூட இந்த கருத்த மனிதர் ஏதோ இடங்களில் அநியாயத்திற்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டோ,காதலியுடன் டூயட் பாடிக்கொண்டோ,வில்லனுடன் சண்டை போட்டுக் கொண்டோ இருக்கிறார்.

'ரஜினிகாந்த்' என்ற பெயர் தமிழ்த் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத மந்திரமாகியிருப்பதற்கு பின்னால் '''ஷிவாஜி ராவ்''' என்ற தனி மனிதரின் வாழ்க்கை எவ்வாறு ''பரிநாமம்'' அடைந்திருக்கிறது என்பதற்கான பதிவோ அல்லது அதற்கான முயற்ச்சியோ தான் இந்த படைப்பு !.

'ரஜினி' என்ற பெயரே எனக்கு "இது எப்படி இருக்கு?" என்ற வசனத்தின் மூலம் தான் எனக்குள் பதிவாயிருக்க வேண்டும்.அப்போது 'அபூர்வ ராகங்கள்'ளோ...'பைரவி'யோ பார்க்கும் அளவுக்கு பொறுமையோ பக்குவமோ எனக்கு போதாது.

நான் சொல்வது 1980 களிலிருந்து 1990 களில் இருக்கும்...சினிமா ரசிகர்களே 'ரஜினி' 'கமல்' என்று இரு வேறு துருவங்களாக பிளவுபட்டிருந்த நேரம்..நான் அப்போ கமல் சைடு !).பைத்தியக்காரன் ,பரட்டைத்தலையன் என்று கேலிகளும் நையாண்டிகளும் பரப்பியபடி இருந்த போதும் ரஜினி ரசிகர் கூட்டதின் பிரம்மாண்டத்தை எண்ணி வியப்பாக இருக்கும்.நானும் ரஜினியின் ரசிகனாகும் ரகசிய ஆசை கொண்டவனாகவே இருந்தேன்!.

அது 'தளபதி' படம் வெளிவந்திருந்த சமையம்.எனக்கு 8 வயதிருக்கும்.மணிரத்னம்,மம்முட்டி,ரஜினி என்று
மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்த திரைப்படத்திற்கு யாரோ கைப்பிடித்து அழைத்து சென்றதாய் ஞாபகம்.
அந்த சினிமாவில் எங்கும் பிரவேசித்த 'சூர்யா' என்ற மனிதன் திரையரங்கை விட்டு வெளியே வந்த
பின்னரும் என்னைத்த் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தான்.இரவில் என்னுடனே ஓரத்தில் '''கிடந்துரங்கினான்''.
ஏதோ கொடியில் உலரும் மஞ்சள் துணி சூர்யாவையே நினைவுபடுத்தியது.அந்த மனிதனின் கண்ணீர்
கணமாக இருந்தது...அவன் கைகள் பழுப்பேறி இருந்த போதும், அவன் பார்வையில் கூட அன்பை
வெளிப்படித்துபவனாகவே இருந்தான்-. ரஜினி என்கிற பிம்பம் என்னுள் படியத்துடங்கியது அப்போதிலிருந்து தான்.


தமிழ் நாட்டில் இரண்டே வகை மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.

ஒன்று ரஜினியை விரும்புபவர்கள் ;
இரண்டு ரஜினியை வெறுப்பவர்கள்;

புறக்கணிப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது !.

இதுவரை யாருக்கும் அமைந்திராத அளவுக்கு ரசிகர்வட்டாரம் ரஜினிக்கு வாய்த்துள்ளது.கையை சுழற்றி
சல்யூட் அடிக்கும் இரண்டு வயது குழந்தை முதல் 22வது முறை ஒளிபரப்பினாலும் 'பாட்ஷா'வையும்
'அண்ணாமலை'யும் வாய்பிளந்து பார்க்கும் தாய்மார்கள் வரை ரஜினியின் தாக்கம் இருக்கதான் செய்கிறது.
வருடத்திற்கு 2 படங்கள்வீதம் வரும் சமகால 'இளசு'களை ஓவர்டேக் செய்து அனைத்து ரசிகர்களின் இதைய
சிம்மாசனத்திலும் அமர்கிறார் ரஜினி.

ஒரு கேளிக்கையாளன் எப்போது நட்சத்திரம் ஆகிறார் ?
ஒரு நட்சத்திரம் எப்போது ஒரு தலைவன் ஆகிறான் ?

ஒரு தலைவன் எப்போது சகாப்த்தமாகிறான் ?

என்ற வினவுகள் ஒரு மனிதனிடம் கவனிக்கப்பட வேண்டியவை.அது ரஜினிகாந்தோ...வேறு
காந்த்தோ...M.G.R.ரோ..வேறுயாரோ எல்லோருக்கும் பொருந்தும்.

இதே ராயப்பேட்டையில் மூட்டை சுமந்த ஒரு மனிதன் இன்று எந்த பொதிமூட்டைகளில் தேடினாலும் அவரின்
ஒன்றிரண்டு புகைப்ப்டமாவது கிடைக்ககூடும் என்பது உறுதி.வாழ்வின் முழுநீள ஏற்ற இறக்கங்களை கடந்து வந்த
எந்த மனிதனுடைய வாழ்வும் பாதுகாக்கப் படவேண்டியது தான்.அந்த வகையில் இந்த புத்தகம் அக்கடமையைச்
செய்துள்ளது!.

இவ்வாறு வெற்றிகளை சுவைத்துவந்த சாதணைகளுக்கு பின்னால் பல அறிவாளர்களது பங்கு இருக்கிறது.அவை
அனைத்தையும் பரவலாக விரித்திருக்கிறது இந்நூல்.

ரஜினியின் வாழ்வில் வரும் வெவ்வேறு காலகட்டங்களை அவரின் பட தலைப்புகளைப் பயண்படுத்தியிருப்பது நல்ல CREATIVITY

புத்தக பெரும்பான்மை பக்கங்களில் ரஜினி சொன்னதாக வரும் கருத்துக்களௌக்கு அவர் அளித்த பேட்டிகளையே
மேற்கோள் காட்டியிருப்பது சிறந்த உத்தி.இது தேவையில்லாத சந்தேகங்களை களைவதுடன் ,நாம் உறுதி
செய்யப்பட்ட கருத்துக்களைத் தான் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.

ரஜினி மசாலாப் படங்களையே செய்து வந்தாலும் கலைப் ''ப்டங்கள்'' மீது கொண்டிருக்கும்
ஈடுபாடுகளையும்.,அவரது இலக்கிய ''ரசணை'' '''உபபந்ந்டவம்','''விஷ்ணூபுரம்' ''போண்ற'' சுத்த இலக்கிய படைப்புகள்
வரை நீள்வது இதுவரை கேட்டிறாத தகவல்கள்

புத்தகத்தில் வரும் கருத்து வழிதல் முனுக்குப் பின் முரனாக இருப்பதுவும்,சிற்சில இடங்களில் ஆசிரியர் தடுக்க
வேண்டும் என்று நினைத்த போதும் ஒருதலைபட்சமான 'ஜால்ரா' கருத்துக்கள் வெளிப்படுவதும் சிறிய நெருடல்.

தமிழ் ரசிகர்களுக்கும் ,தமிழ் ரசணைக்கும் ஒரு முன்னுதாரணம் ரஜினியின் வெற்றி.அது வரை சினிமா உலகில்
ஹீரோக்களை மட்டுமே பிரதாணப்படுத்தி வந்த காலகட்டம்.ஹீரோ போலவே முடிவெட்டிக் கொள்ளவும்,துணி
அணிந்து கொள்ளவும் விரும்பினார்கள்.ஆனால் ஒரு வில்லனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது தமிழ்
சினிமா.ஆடை ,அலங்காரம் தாண்டி ஒரு நடிகனின் (mannerism) மேனரிசத்தை மக்கள் 'கப்' என்று பிடித்துக்
கொண்டார்கள்.ஹிந்தி உலகில் கடந்த 20 ஆண்டுகளில் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு 'ப்ரான்' ** என்றூ பெயர்
வைக்கவில்லை என்கிறது ஒரு பிரபல பத்திரிக்கை.ஆனால் இங்கோ கதையே வேறு...ரஜினி சிகரட்டைக் கவ்விப்
பிடித்தாலோ...தலையைக் கோதி விட்டாலோ..வெளியே வரும் அனைவரும் அதை முயற்சிக்கிறார்கள்.பாட்சா படம்
பார்க்கப் போனால் திரையரங்கை விட்டு ஆயிரக்கணக்கில் பாட்சாக்கள் வெளிவருகிறார்கள்...''இன்த ''சக்த்தியைத்'' தான்
அரசியலுக்கு ரஜினியை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டியது.

( **ப்ரான் :-ஹிந்தியில் மிகப் பிரபலமான வில்லன் நடிகர்.நம்ம ஊர் நம்பியார் மாதிரி )

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஒருமுறை இணையற்ற படைப்பாளி அடூர் கோபாலகிருஷ்ணன்
கூறியதை நினைவுக்கு வருகிறது "ஒரு நல்ல நடிகனால்,நல்ல தலைவனாகவும் நடிக்க முடியும்" என்றார்.அதனால்
சினிமாக்காரர்களின் அரசியல் பூச்சு இவவளவு முக்கியத்துவமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்க்கு
ரஜினியே நல்ல உதாரணம்.

ரஜினியென்ற நடிகரிடம் தமிழகம் ,கலை உலகம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறது!. பழைய ரஜினி படங்கள்
(முள்ளும் மலரும்,ஜானி,6முதல் 60 வரை) போன்ற படங்களைக் காண எத்தனையோ நாள் விடுப்பு
போட்டிருக்கிறேன்.ஹிந்தியில் அமித்தாப் செய்யும் ரோல்களைக்க் காணும் போது வயிற்றெரிச்கலாகத்தான்
இருக்கிறது.ரஜினியும் இப்படி ஒரு இன்னிங்ஸ் வருவாரா என்று?

ரஜினி பற்றிய பரிபூர்ணமான புத்தகம் என்று இதைக் கூற முடியாவிட்டாலும்,ரஜினி என்னும் வாழ்வியல்
நிகழ்வுகளை,அவரைச் செதுக்கிய நிகழ்வுகளை,தருணங்களை கவனமாக கையாண்டிருக்கிற ஒரு புத்தகம்...

சில உண்மைகள் மறைக்கப் பட்டிருந்தாலும்...சொல்லிய வரை உண்மையே என்று கூறிக்க் கொள்ள முடியும்!!.


ரஜினி என்ற வெற்றி மனிதனின் வரலாறு இதில் சப்தமாக சொல்லப் பட்டிருக்கிறது...
இது சகாப்த்தமாவது காலத்தின் கையில் தான் இருக்கிறது...


இந்த தலைப்பை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்....
என் புதிய i-PODடில் ஒரு பாடல் கேட்க நினைத்து ஆன் செய்கிறேன்...

ஹை பிட்சில் பாடல் ஒலித்தது...

"விடுகதையா உன் வாழ்வே...!


விடை சொல்லுவார் யாரோ...!! "


எழுத்து-கோட்டொவியம்

ப்ரவீன்




Thursday, August 31, 2006

என் ஜன்னலின் வழியே- 'நெடுங்குருதி'

நெடுங்குருதி - தமிழின் தலை சிறந்த படைப்பு

( இந்த விமர்சணத்தை படித்து பார்த்து,இதைப்பதிவிட ஒப்புதலும்..பாரட்டும் அளித்த ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி )


புத்தக கடைகளில் ஒரு நாவல் என்னை படிக்குமாறு நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருக்கிறது.விலையும்,வேலையும் ஒத்திப்போட்டுக் கொண்டே வந்தது.

படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏற்கனவே அலமாரிகளில் காத்திருந்த போதும் புது புத்தகங்கள் வாங்குவதை நிறுத்த முடிவதே இல்லை. மிட்டாய்க்காரன் பின்னால் செல்லும் ஒரு குழந்தையைப் போல மனம் மீண்டும் மீண்டும் அச்சுக்களை நோக்கி செல்கிறது.அப்படி புத்தகமே வாங்கக்கூடாது என்று வைராக்கியமாக கடைக்குள் நுழைந்த ஒரு பொழுதில் 'நெடுங்குருதி' வாங்கினேன்.

நாவலின் முதல் பக்கத்திலிருந்தே புதிய ஒரு உலகத்தில் ப்ரவேசிக்கும் அனுபவம் உண்டாகிறது.வெயில் உக்கிரமேறிப் போன 'வேம்பலை' என்ற கிராமத்தில் கதை சம்பவிக்கின்றது.எந்த கதாபாத்திரத்தயும் சுற்றிவராமல் நிகழ்வுகள் வேம்பலை என்ற நிலவெளியை சஞ்சரித்து வருகிறது.கதையில் படிந்திருப்பது வேம்பலையின் நிழல் மட்டும் அல்ல!.ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற ஆட்கள்-ஒடுங்கிவிட்ட-கிராமங்களின் நிழல் தான் கதை எங்கும் படிந்து கிடக்கிறது.

வேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள்.அவர்கள் நம்பிக்கைகள் ,வழிபாடுகள் அனைத்தும் கேட்டிராதவையாக இருக்கிறது.ஒருவேளை நம் முன்னோர்கள் இப்படித்தான் அலைந்து கொண்டிருந்திருப்பார்கள் போல."எறும்புகள் ஒரு ஊரை விட்டு விலகிப்பொனால்,அந்த ஊர் மனிதர்கள் வாழ சாத்தியமற்று போகிறது"."எறும்புகள் இரவுகளில் வானில் பரந்து போவதாகவும் .எறும்புகளுக்கு கடவுளின் இடம் தெரியும்" என்றும் ஆதிலட்சுமி சொல்லும் போது வாயடைத்து போய் கேட்டுக்கொண்டிருக்கும் நாகு போல் நானும் ஆதிலட்சுமி வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சிறுவன் நாகு நம்முடன் அலைந்து திரிந்த பால்ய கால நண்பர்களை நினைவுபடுத்துகிறான்..எறும்புகள் மொய்த்துப் போய் தரையில் கைகளை தேய்த்தபடி இருக்கும் சென்னம்மாவின் வீட்டைக்கடக்க நமக்கும் பயம் கவ்விக் கொள்கிறது.

ஒரு கதை என்பது உண்மைக்கு எவ்வளவு நெறுக்கமாக உள்ளது,அதே சமையம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கொண்டே தீர்மாணிக்கப்படுகிறது.இந்த அளவுகளில் நேர்த்தியாக விளையாடக் கூடியவர் ராமகிருஷ்ணன்.

ஊரைச்சுற்றி வரும் இரண்டு பரதேசிகள் மனதிற்கு மிகவும் நெறுக்கமானவர்களாக உள்ளார்கள்.வெகு நாள் கழித்து ஊருக்கு வரும் பரதேசிகள் வரவேற்பவர்களற்று தின்ன உணவற்று அலைகிறார்கள்.பசி புரயோடிப்பொகும் போது ரோஜாவின் அழகு தெரிவதில்லை.பஞ்சம் பரதேசிகளைக் கூட பீடித்து விடுகிறது.புறக்கணிப்பயும் உதாசீனத்தயும் தாங்கமுடியாமல் பசியோடு மூத்திரம் பெய்தபடியே கொச்சையாக ஏசிக்கொண்டு நடந்துசெல்லும் அவர்களின் இரவு மனதை கசக்குவதாய் இருக்கிறது.

சொந்த பூமி என்பது ரத்த சம்மந்தமுள்ள உறவாகவே கிராமங்களில் கருதப்படுகிறது.பசு மாடுகளையும் ,ஆடுகளையும் புத்திரர்களைப் போல நேசிக்கும் மனிதர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்.அழுகையை மறைக்க தெரியாத பெண்களும்.உக்கிரத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஆண்களுமாய் வேம்பலை வெம்மை உடையதாகவே இருக்கிறது.

வீட்டின் மீது பூனை போல் ஏறி வரும் வெயிலை நோக்கி, "என்னடா பெரிய மசுருன்னு நெனப்பா ? .வந்தேன் வக்காளி வகுந்திடுவேன் !" ன்னு தன் சூரிக்கத்தி எடுத்து கத்தும் சிங்கிக் கிழவனின் சப்தம் பிரம்மாண்டமானதாக எதிரொலிக்கிறது.


"ஊரின் சுபாவம் மக்களின் மீது படிந்து விடுகிறதா? அல்லது மக்களின் சுபாவம் ஊரின் மீது படிந்து விடுகிறதா என்றே தெரிவதில்லை".என்று 'கதாவிலாசத்தில்' ஒரு வாக்கியம் வரும்.கோடையில் துடங்கும் கதைவெளி வசந்தம்,மழை காலங்களைக் கடந்து பனிக்காலத்தில் முடிகிறது.பருவ காலங்கள் கூட மக்களின் மீது அப்பிக்கொண்டு விடுகிறது.வெயிலில் உக்கிரமேறிப்போகும் சுபாவமும்,"மழைக்குப் பின் மக்களின் பேச்சில் கூட குளிர்மை ஏறி இருந்தது..."மழை முடிந்த காலையில் மக்கள் விடாது புன்னகைத்த வண்ணமே இருந்தார்கள்" போன்ற அவதானிப்புகளே இதற்கு சான்று.

வருடங்கள் ஏறிய பின்னும் ஊர் தன் சுபாவங்களை மாற்றிக் கொள்வதே இல்லை.கதைவேளையில் மூன்று தலைமுறைகளை கடந்து விட்ட பின்னும் வேம்பலைக்குத்திரும்பும் மக்கள் தன் ஊரிடம் தங்களை ஒப்படைத்தபடியே இருக்கிறார்கள்.

ஊர் ஓர் விசித்திர முடிச்சு!.தனக்கு பிரியப்பட்டவர்கள் கால்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கயிற்றை கட்டி வைத்துள்ளது.தனக்கு தேவையான போது அவர்களை தனக்குள் இழுத்த்க் கொள்ளவும், நினைக்கும் போது அவர்களை வேளியேற்றவும் அது தயங்குவதே இல்லை.வேம்பலை ஒரு நீள் கதை.

இதைப் படிக்கும் போது நாம் சுற்றி அலைந்த ஊர்களும்,பிரிந்து வந்து விட்ட வீடுகளும்,ஏதேதோ ஊர்களில் கிடந்து உறங்கிய விழாக்கால ஊர்களின் நினைவு மேலெழுகிறது.கயிறு ஏதேனும் தென்படுகிறதா என்று என் கால்களிலும் தடவிப் பார்க்கிறேன்.எந்த ஊர் நம்மை எப்போது இழுத்துக் கொள்ளுமோ என்று பயமாக உள்ளது !.

வீட்டிலிருந்து திடீரென காணாமல் போகும் ஆண்களும்,கண்ணீர் உரைந்து போன பெண்களும்,மிதமிஞ்சிய போதையில் திரியும் வாலிபர்களும்,குறுதிக்கறை ருசிகண்ட பூமி என வேம்பலை கண்முன்னே விரிந்து கிடக்கிறது.வேம்பலை எங்கோ இருக்கும் இடமல்ல !.நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு வாழ்வியல்.

பொன்னும் பவழமும் சிதரிக்கிடக்கும்,வனிகம் செழித்துப் பொங்கும், மும்மாரி பெய்யும்,கற்புக்கரசிகள் மழை கொண்டுவருவார்கள் என்றெல்லாம் மட்டுமே சொல்லப்பட்ட முலாம் பூசிய சரித்திர விஸ்தரிப்புகளிலிருந்து வேறுபட்டு ஒரு கலாச்சாரத்தின் உண்மயான,எதார்த்தமான வாழ்வியல்,அவர்களின் நம்பிக்கைகள்,சட்டதிட்டங்கள்,உறவுகள் என்று உண்மயின் ஒரு துண்டாக விழுந்திருக்கும் இந்நாவல் தமிழர்களை பிரதிபலிப்பதில் முக்கியாமான படைப்பு.அதனாலே இதை தமிழில் தலைசிறந்த படைப்பு என்று சொல்கிறேன்.

நெடுங்குறுதி என்பது ஒரு புத்தகம் அல்ல.அது ஒரு அனுபவம்.தீவிர இலக்கிய ,கலாச்சார தேடல் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று !

(இதில் கதையில் ஒரு பகுதியை மட்டுமே நான் எடுத்தாண்டுள்ளேன்.இனி இப்புத்தகத்தைப் படிப்பவர்களின் ஆர்வத்தை குறைக்காமலிருக்கவும், நேரமின்மையாலும் கதையின் பெரும்பான்மையானவற்றை பற்றி நான் பேசவில்லை.என்னை மிகவும் கவர்ந்த வேம்பலை பற்றி மட்டுமே பேசியுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

புத்த்கத்தின்...

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : உயிர்மை
விலை : 275

* * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Wednesday, June 28, 2006

என் ஜன்னல் வழியே : புதுப்பேட்டை

என் ஜன்னல் வழிப் பார்வை:
புதுப்பேட்டை
" கழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உன்டோ !"



செல்வராகவன் ,அரவிந்த் கிருஷ்ணா,யுவன் சங்கர் ராஜாவின் இன்னுமொரு கூட்டு முயற்சி.
ஒரு கலவரப் படம் ,குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று சொல்லப்படுகிறப் படம்,ஆனால் குடும்பத்தினர் எல்லொருமே தனிதனியே பார்துவிடுகிற படமாக செல்வராகவன் படங்கள் அமைந்து விடுகின்றன.பதிரிக்கைகளின் ஞாயமான விமர்சணங்கள் இல்லாமையும் ,தவறுதல்லன பின்னூட்டங்களும் னல்ல படங்கள் மக்களை சென்று அடைவதற்கு தடையாக உள்ளது.நமக்கு அதெல்லாம் வேண்டாம்.நாம வந்த வேலையய் பார்ப்போம்.

பின்னனி இசை போதை தருவதாக இருக்கிறது."உனக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்குமா ?" "ஏங்...யாருக்கு புடிக்காது.நாயீ பூணைக்கெல்லந்தான் அம்மான்னா புடிக்கும்..." என்பதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் தனுஷ் வேளுத்து வாங்குகிறார்.16 வயதினிலே காலகட்டங்களில் கமலின் PERFOMANCE -சை பார்ப்பது போலவே இருந்தது.

பாங்..பேங்...பாங்..பேங்... என்று சவுன்டு விடாமல்,மெல்லிய இசையிலெயே திகிலை நிலைநிறுத்தியிருப்பது புதுமை.ரீ-ரெக்கார்டிங்கில் உள்ள அர்த்தமுள்ள மௌனங்கள்,யுவனை தன் அடுத்த நிலைக்கு அழைத்து சென்றிருக்கிறது.

திரைக்கதை பற்றியெல்லாம் பேசும் அளவுக்கு அதிகப்படியாக செல்ல மாட்டேன்!..கவலைப்ப் படாதீர்கள்."ஒரு தாதா கூட்டத்தில் எதர்ச்சியாக நுழயும் தனுஷ் பல வாழ்க்கைப் போராட்டன்களில் சிக்குகிறார்."

கூடி உண்ட போதும், அவரவர் உயிர்களுக்கு அவரவர் தான் பொறுப்பு என்ற சூத்திரத்தை அறிந்து கொள்கிறார்."ஆபத்தில் கோழைகூட வீரனாகிறான்" என்பதைப்போல உயிர் மீது உன்டான பயம் வீரம் என்று கறுதப்படுகிறது.அதை வெளிப்படுத்துவதாக ,
ஒருவனது கையை வெட்டப் போன இடத்தில் ,
"என்ன குமாரு பயமா இருக்கா "
"இல்ல (என்பது போல தலை ஆட்டுகிறர்)"
"சும்மா சொல்லாத.பயமா தானே இருஉக்கு"
"ஆம (என்பது போல தலை ஆட்டுகிறர்)"
"ஏனக்கும் பயமாதான் இருக்கு.
இருக்கட்டும்.பயந்தான் உன்ன காப்பாத்தும்.
நம்ம உயிர் மேல பயம் இருந்த்தத்தான் அடுத்தவன் உயிர எடுக்க முடியும்"...என்ற வசனம் பெரும் ததுவத்தை உள்ளடக்கியுள்ளது

மீண்டும் அதே சினிமா சிவப்பு-விளக்கு. சிவப்பு-விளக்கு பகுதி என்றால் இப்படித்தான் இருக்குமென்று சினிமா பார்வையாளர்களிடம் ஒரு PREJUDICE க்ரியேட்டாகிவிட்டது.எதார்த்தமான சில்மிஷங்கள்...செல். படத்தில் சொல்லத் தேவயில்லை.ஓரு கால கட்டத்தில்...பெரியவுரு... என்று சொல்லப்படும் கூட்டத்தலைவனை போட்டுத்தள்ளுகிறார் குமார். 'நேத்து மோளச்சவன்','ஒரு கொலை பன்னுனவன்..' என்று கேலி செய்யப்படும் குமார் ஒரு மாபெறும் வீரன்.நெருப்பு சிறியதாய் இருந்த்தால் என்ன ? அது வெளிச்சம் தானே .வெளிச்சம் வந்த்தால் இருள் பொய்விடவேன்டியதுதான் !.இல்லாமல் இருள் "இல்லை..இல்லை அதெப்படி ..நான் இவ்வாளவு நாளாக இருக்கிறேன்.நேற்று வந்த சிறு தீக்குச்சி என்னை விறட்டுவதா ?" என்றெல்லாம் சொல்ல முடியாது."கழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உன்டோ ?" என்கிறார் பாரதி .

தெருவோர சிறுவனாக;கருணையில்லா பொறுக்கியாக;மனிதாபமுள்ள காதலனாக மற்றும் பாசத்தால் பீடிக்கப்பட்ட அப்பாவாக வெவ்வேறு பரிணாமங்களில் தன் முத்திரையை பதித்திருக்கிறார் தனுஷ்.

செல்வியைய் கட்டாய மணம் புரிந்து கொள்கிறபோதும்,"இப்ப எங்கூட படுக்காலைனா உன் அண்ணனை கொன்றலான்னு தொனுது " எனப் பேசும் போது வக்கிறப்பட்டு நிற்க்கும் குமார் "ஊசுரோட இருக்கனுன்டா கண்ணு.அது தான் முக்கியம் ! ம்ஹூம்ம்...உன்ன எப்படியெல்லாம் வளக்கனும்னு ஆசப்பட்டேன்" என்று பேசும் போது இதயத்திற்க்கு மிக நெறுக்கமான ஒருவரைப் போல் தெறிகிறார்.

ஒரு படத்தில் காமடி என்பது முக்கியம்.தனுஷே ஒரு பெரிய காமடி.பல இடங்களில் 'இதை சீரியசாக எடுத்துக்கொள்வதா...இல்லை காமடியாக எடுத்துக்கொள்வதா என்று பெறுங்குழப்பம்.அந்த முடிவை பார்வையாளர்களிடமே விட்டுவிட்டது இயக்குனரின் சமயோஜிதம்.நகைச்சுவை கதையோடு கதையாக கலந்திருக்க வேண்டும்.அதுவும் அது ஹீரோ மூலமாகவே வெளிப்பட்டால் கதை,கதாநாயகன் ரென்டுபேருக்கும் ப்ளஸ்,இதற்கு சிறந்த உதாரணம் பாக்கியராஜ் படங்கள்.அப்படிப்பட்ட எக்ஸ்பெர்டைஸ் புதுப்பேட்டயில் தெரிகிறது.

கொல்ல வந்த எதிரியின் விருப்பத்திற்க்கு பனிந்து செல்லும் விசித்திர கதாபாத்திரமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது கொக்கி குமார் என்னும் படைப்பு.கொலையாளிக்கும் கொலை செய்யாப்பட்டவனுக்கும் இறுதியில் ஏற்படும் ஒரு விதப் பாச உணர்வு ,சாதரண பார்வயில் புரிந்து கொள்ள முடியாதவை.கொலையுண்ட மூர்த்தியின் பிணத்தை கட்டி அழும் காட்சி கொக்கி குமார் என்னும் கதாபாத்திரத்தின் உச்சம்.(இக் காட்சி பல திரையரங்குகளில் திரையிடப்படவில்லை).

இன்று ஹீரோ வில்லன் என்ற இரு ஜீவராசிகளுக்கு நடுவே கதை நிகழ்வது இல்லை.பாத்திரங்கள் அரங்கேற்றப் படுகின்றண .ஹீரோ வில்லன் தேர்வெல்லாம் பார்வையாளர்களே செய்துகொள்கிறார்கள்.


கதை என்பது முடிந்த விஷயம் அல்ல ...அது ஒரு நிகழ்வு..நிகழ்ந்து கொண்டே இருப்பது...

கொக்கி குமார் நல்லவனா கெட்டவன்னா தெரியாது
புதுப்பேட்டை என்பது பொய்யா உண்மையா என்று தெரியாது...

ஏனென்றால் "ஒன்று உண்மையா பொய்யா என்பதை தீர்மாணிப்பது காலம் தானே ? "

*** முற்றும்***