
---------------------------------
அன்று கும்ம் இருட்டு...
இருட்டென்றால் எப்படி சொல்வது..?
அவள் கூந்தல் போல இருட்டென்று சொல்லலாம்
இல்லை..இல்லை..அவள் கருவிழி இருட்டு
அப்படி யொரு மழை
மழை யென்றால்..அது அது
அவளது பேச்சைப் போல மழை
அய்யோ அந்த மின்னல்
மின்னலென்றால்...மின்னல்
அவள் பார்வை போன்ற மின்னல்
உலகைப் பிறட்டும் இடி
இடியென்றால் ...அப்பப்பா..
அவள் கோபம் போல
எவ்வளவு நேரம்...
கொஞ்ஜம் கூட குறையவே இல்லை...
அவள் சிற்றூடல் போல
எப்படியோ சமாதானம் ஆயிற்று
என்ன ஒரு அமைதி...
அவளது மோகம் போல
எப்படியோ விடிந்தது
கதிரவன் கைகாட்டியது ஆத்தே!
என்ன பிரகாசம்...அவள் புன்னகை போல..
~ 2003
5 comments:
ப்ரவீன் உங்கள் வார்த்தை ப்ரயோகங்கள் அமைதியான சுனாமி. மிகவும் அருமை. நான் கூட ஒர் கவிதையை பதிந்துள்ளேன் பார்த்து தங்களின் கருத்தை கூறவும். தமிழ் மணத்தில் தங்கள் படைப்புகளை பதியுங்களேன்.
மற்றும் எனது பதிவில் அனைத்து தமிழ் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறேன். பயன் பெறவும்.
Hi Praveen,
Really wonderful your lines are. Anu anuvaana un rasanaiku uriyaval.. evalo aval????
அப்படியெல்லாம் யாரும் இல்லை சுதா...
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு கற்பணை இருக்கும்.அப்படியே அவர்கள் அமைந்து விடாமல் இருந்தாலும் அந்த அரூபத்தை அசைபோட்டுட்டே தான் சுத்துவாங்க...அப்படித்தாங்க இதுவும் ;-)
//கொஞ்சம் கூட குறையவே இல்லை...
அவள் சிற்றூடல் போல
மழை யென்றால்..அது அது
அவளது பேச்சைப் போல மழை//
வாவ் !! :)) மேலும் தொடருங்கள் ப்ரவீன்.
vavv...wonderful...
i expect more...
Post a Comment