
கல்வெட்டுக்கள்
-----------------------
பாழான பழைய தியேட்டர்
சுவர்கள் புதுப்பிக்கும் போதும்
பொதுக்க் கழிப்பிடம் எப்போதாவது
பெயிண்ட்டடிக்கும் போதும்
மந்திரி வருவதறிந்து, அவசரமாய் ரயில்கள்
அழகுபடும் போதும்
கட்டுப்பட்டுக் காத்திருந்த சாலயோர மரங்கள்
வெட்டப்படும் போதும்
சரிந்து ஆடும் கல்லூரி மேசைகள்
சரிபார்க்கப்படும் போதும்
சிதைவு பலபட்ட ஹாஸ்டல் கதவுகள்
அலங்கரிக்கும் போதும்
பள்ளியோர கள்ளி மரங்கள்
களையெடுக்கப்படும் போதும்...
காணாமல் போகும்
சில காதல் கல்வெட்டுக்கள் !!
-2003
4 comments:
:) அருமை
//பள்ளியோர கள்ளி மரங்கள்
களையெடுக்கப்படும் போதும்...
காணாமல் போகும்
சில காதல் கல்வெட்டுக்கள் !!//
நல்லாருக்குங்க. அழகான கற்பனை.
பின்னூட்டத்திற்கு நன்றி
Post a Comment